4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து

Last Modified ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (17:41 IST)
இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தார். முதல் பந்தில் 2 ரன்களும், 2வது, 3வது பந்தில் ரன் ஏதும் எடுக்காத தினேஷ், 4வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 5வது பந்தில் ஹர்திக் பாண்ட்யா ஒரு ரன் எடுக்க 6வது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சர் அடித்தும் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க முடியவில்லை. இதனால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து அணி: 212/4
20 ஓவர்கள்

செய்ஃபெர்ட்: 42 ரன்கள்
முன்ரோ: 72 ரன்கள்
கிராந்தோம்: 30 ரன்கள்

இந்திய அணி: 208/6 20 ஓவர்கள்
ஷங்கர்: 43 ரன்கள்
ரோஹித் சர்மா: 38 ரன்கள்
தினேஷ் கார்த்திக்: 33 ரன்கள்

ஆட்டநாயகன்: முன்ரோ
தொடர் நாயகன்: செய்ஃபெர்ட்


இதில் மேலும் படிக்கவும் :