Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை: நெஹ்ரா!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 3 நவம்பர் 2017 (14:02 IST)
கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற நான் யாருடைய அனுமதியையும் பெற வேண்டிய அவசியமில்லை என நெஹ்ரா கூறியுள்ளார்.

 
 
நேற்று முந்தினம் நடைபெற்ற இந்தியா நியூசிலாந்த் இடையேயான டி20 முதல் போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் நெஹ்ரா.
 
இந்நிலையில், கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெரும் போது தேர்வாளர்களின் அனுமதியை பெற வேண்டும் ஆனால், நெஹ்ரா இது குறித்து தேர்வாளர்களிடம் அனுமதி பெறவில்லை என சர்ச்சை எழுந்தது.
 
இதற்கு நெஹ்ரா பின்வருமாறு பதிலளித்துள்ளார், நான் கிரிக்கெட் விளையாட்டை துவங்கிய போது எந்த ஒரு தேர்வாளர்களிடமும் அனுமதி பெறவில்லை. எனவே, ஓய்வு பெறும் போது தேர்வாளர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. 
 
கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் இது குறித்து அலோசித்தே இந்த முடிவை எடுத்தேன். 18 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய மகிழ்ச்சியுடன் ஓய்வு பெறுகிறேன் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :