Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சன் ரைசஸ் அணிக்கு முதல் தோல்வி: மும்பையிடம் வீழ்ந்தது

sivalingam| Last Modified வியாழன், 13 ஏப்ரல் 2017 (01:31 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்றிரவு நடந்த போட்டியில் சன் ரைசஸ் அணியை மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் பந்துவீசியது மும்பை அணி. முதலில் பேட்டிங் செய்த சன் ரைசஸ் அணியை மும்பை 158 ரன்களில் கட்டுப்படுத்தியது. சன் ரைசஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் தவான் மற்றும் வார்னர் அரைசத வாய்ப்பை நழுவவிட்டனர். அதன்பின்னர் வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை 18.4 ஓவர்களில் 6 விக்கெட் மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 3விக்கெட்டுக்களை வீழ்த்திய மும்பை அணியின் பூம்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :