வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 26 ஜூலை 2015 (12:51 IST)

கால்பந்து வீரர்களை பின்னுக்கு தள்ளினார் தோனி; உலகின் விலைமதிப்பு மிக்க வீரர்களில் 9ஆவது இடம்

இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலகின் சந்தை மதிப்பு மிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
 

 
லண்டன் ஸ்கூல் ஆப் மார்க்கெட்டிங் என்ற நிறுவனம் இந்தப் பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த பட்டியல்  வீரர்களின் பிராண்ட் வேல்யூ, தற்பொழுது ஸ்பான்சர்சிப் மூலம் கிடைக்கும் வருமானம், மொத்த வருமானத்தில் இவற்றின் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளது.
 
இந்த பட்டியலில் மகேந்திர சிங் தோனி, கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் டென்னிஸ் பிரபலங்கள் மரியா ஷரபோவா, ஆண்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 9ஆவது இடத்தை கைப்பற்றியுள்ளார். 20 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
உலகின் சந்தை மதிப்பு அதிகமுள்ள விளையாட்டு வீரராக சுவிட்சர்லாந்து நாட்டின் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கோல்ப் வீரர்கள் டைகர் உட்ஸ் 2ஆவது இடத்தையும், பில் மிக்கெல்சன் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
 
முதல் 20 இடத்தைப் பிடித்த வீரரகள்:
 
ரோஜர் ஃபெடரர், டைகர் உட்ஸ், பில் மைக்கெல்சன், லெப்ரான் ஜேம்ஸ், கேவின் டுரண்ட், ரோரி மெக்கில்ரோய், நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால், மகேந்திர சிங் தோனி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கொபே பிரையண்ட், மரியா ஷரபோவா, லயோனல் மெஸ்ஸி, உசைன் போல்ட், நெய்மர், ஆண்டி முர்ரே, கெய் நிஷிகோரி, டெர்ரிக் ரோஸ், ஃப்ளாய்ட் மேவெதர், செரீனா வில்லியம்ஸ்