1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 28 ஜூன் 2016 (13:26 IST)

’மெஸ்ஸிக்கு கேப்டனுக்கான திறமை இல்லை’ - மரடோனா

மெஸ்ஸி சிறந்த மனிதர்தான். ஆனால், அவருக்கும் கேப்டனுக்கான திறமை இல்லை என்று முன்னாள் அர்ஜெண்டினா ஜாம்பவான் டீகோ மரடோனா கூறியுள்ளார்.
 

 
நேற்று நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து இறுதி போட்டியில் சிலி அணியினை எதிர்கொண்டது.இரு அணியினரும்  ஆட்டத்தின் இறுதி வரை கோல் எதுவும் எடுக்காததால், பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
 
அதில் தனக்குரிய வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டார். இதனால் அர்ஜெண்டினா அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
 
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில், அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்ததால், அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். இதனால் கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
போட்டிக்கு முன்னதாக முன்னாள் ஜாம்பவான் மரடோனா கூறுகையில், ’‘நாங்கள் உறுதி யாக கோப்பையை வெல்வோம். ஒருவேளை இறுதிப்போட்டியில் வெற்றி பெறாவிட்டால் அர்ஜென்டினா வீரர்கள் நாடு திரும்பக்கூடாது" என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், மெஸ்ஸியின் ஓய்வு குறித்து கூறியுள்ள மரடோனா, "மெஸ்ஸி ஒரு சிறந்த நபர். ஆனால், அவருக்கு ஆளுமைத்திறன் கிடையாது. மெஸ்ஸிக்கு கேப்டனாக இருப்பதற்கான திறமை இல்லை.
 
தொடர்ந்து அவர் விளையாட வேண்டும். அவருக்காகவும், அணிக்காகவும் தொடர்ந்து இருக்க வேண்டும். ஏனெனில், 2018 இல் ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பினாக ஆக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.