மலேசிய பாட்மிண்டன் போட்டி: இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


Caston| Last Updated: வியாழன், 21 ஜனவரி 2016 (12:46 IST)
மலேசியாவின் பெனாங் நகரில் நடந்து வரும் மலேசிய மாஸ்டர்ஸ் கிரண்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கொல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 
 
இந்த போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து சுவிட்சர்லாந்தின் சபிரிங்காவை எதிர் கொண்டார். முதல் சுற்றில் 21-17, 21-16 என்ற நேர் செட்களில் சிந்து சபிரிங்காவை தோற்கடித்தார்.
 
இதேப்போல் இந்தியாவின் மற்றொரு வீரர் ஸ்ரீகாந்த் மலேசியாவின் வெய் பெங் சாங்கை எதிர்கொண்டு 21-17, 21-11 என்ற நேர் செட்களில் வெய் பெங் சாங்கை தோற்கடித்தார்.
 
போட்டித் தரவரிசையில் 10 வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் அஜய் ஜெயராம் ஜப்பானின் டகுமா உயேடாவை 21-19, 21-11 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.
 
இந்தியாவின் சாய் பிராணீத் மலேசியாவின் ஷாஸன் ஷாவை 21-13, 21-15 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தினார்.
 
மேலும் மகளீர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி முதல் சுற்றில் மலேசியாவின் மெய் குவான், லீ மெங் ஜோடியை எதிர்கொண்டது. 21-14 என முதல் செட்டை கைப்பற்றிய ஜூவாலா கட்டா ஜோடி கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 21-14 என மலேசிய ஜோடி கைப்பற்றியது. மூன்றாவது செட்டை இந்திய ஜோடி அபாரமாக 25-23 என கைப்பற்றி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :