களத்தில் மிட்பீல்டராக விளையாட சம்மதம் - மெஸ்சி


Mahalakshmi| Last Modified செவ்வாய், 11 ஆகஸ்ட் 2015 (12:30 IST)
கால்பந்து ஆட்டத்தில் ஜாம்பவானான மெஸ்சி களத்தில் மிட்பீல்டராக அதாவது நடுக்கள வீரராக விளையாட தயக்கம் ஏதும் இல்லை என கூறியுள்ளார். 
 
 
கால்பந்து வீரர் மெஸ்சி களத்தில் ஸ்டிரைக்கராக களமிறங்கி எதிரணியை களங்கடிக்கும் திறன்கொண்டவர் என்றார் மிகையாகாது. இவர் களத்தில் நேர்த்தியாக பந்துகளை கடத்தி கோல் அடிப்பதில் சிறந்து விளங்கியவர் ஆவார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை சமீபகாலமாக மெஸ்சியின் ஆட்டத்திறன் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. 
 
பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது கோல் மழை பொழியும் மெஸ்சி, ஏனோ தன் சொந்த நாட்டிற்காக விளையாடும் தருணத்தில் கோட்டை விட்டு விடுகிறார். இதிலிருந்து மீண்டு வர மெஸ்சி படாதபாடு படுகிறார். இதனால் களத்தில் மிட்பீல்டராக செயல்பட தயார் என மெஸ்சி கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து மெஸ்சி கூறுகையில், களத்தில் எவ்வித வரிசையிலும் விளையாட திட்டமிட்டுள்ளேன். அனைத்து வீரர்களுக்கும் தன் இறுதி கட்ட விளையாட்டு வாழ்க்கை நெருங்கும் போது இதுபோன்ற சர்ச்சைகளை சந்திக்க வேண்டியுள்ளது என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :