Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் தோனியின் முடிவுகளை செயல்படுத்தும் வீரர்: கோலி பேட்டி!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 31 ஜனவரி 2017 (11:58 IST)
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடருக்கு முன்பாக கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்தார். 

 
 
நடந்து முடிந்த இரண்டாம் டி20 போட்டியில், கடைசி 2 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது.  
 
அப்போது, நெஹ்ரா பந்து வீசிய 19 வது ஓவரிலும், பும்ரா வீசிய 20 வது ஓவரிலும் இந்திய அணி ஏறத்தாழ தோனி கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 
 
ஃபீல்டர்களை எங்கு நிறுத்த வேண்டும் போன்ற உத்தரவுகளை தோனியே பிறப்பித்தார். கேப்டன் பொருப்பில் இருந்த கோலி தோனியிடமே கருத்து கேட்டார்.
 
கோஹ்லி ஃபீல்டிங்கின் போது பவுண்டரி எல்லைக்கே சென்றுவிட்டார். தோனி தான் அணியை வழி நடத்தினார். இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 
 
இது குறித்து கோலி, நான் தோனியின் முடிவுகளை செயல்படுத்தும் பொறுப்பில் தான் இருந்தேன் என்று ஒப்புக்கொண்டார். மேலும், தோனியின் வழிகாட்டுதல் விலை மதிப்பில்லாதது. 
 
நான் கேப்டன் என்ற வகையில் ஒரு திட்டத்தோடு களமிறங்குவேன். ஆனால் தோனி கூறும், ஆலோசனைகளையும் கேட்டு, அதன்படி, நடந்துகொள்வேன் என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :