1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 அக்டோபர் 2016 (12:49 IST)

இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர்: கோஹ்லியின் சர்ச்சை கருத்து

இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் விரக்திமான் சாஹா தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

 
நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விரக்திமான் சாஹா சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் சாஹா தான் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், சாஹா தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார், விக்கெட் கீப்பிங்கிலும் புத்திசாலி தனமாக செய்ல்படும் சாஹா பேட்டிங்கும் சிறப்பாக செய்து இந்திய அணிக்கு பெரிதும் கைகொடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.