வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (19:15 IST)

ஐஎஸ்எல் போட்டி: தோடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 9 வது லீக் ஆட்டத்தில் சென்னை எப்சி அணி கோவா அணியுடன் விளையாட உள்ளது. முந்தைய 2 போட்டிகளிலும் தோல்வி தழுவிய நிலையில் வெற்றிபெற வேண்டிய கட்டத்தியத்தில் சென்னை அணி உள்ளது.


 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 3ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.
 
இன்று நடக்கும் 9 ஆவது ‘லீக்’ ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணியும் கோவா அணியும் மோதுகின்றன. கோவாவில் நடைபெறும் இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கிறது.
 
சென்னை அணி இதற்கு முன்பு 2 ஆட்டத்திலும் தோல்வி அடைந்தது தொடக்க ஆட்டத்தில் 2–3 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ கொல்கத்தாவிடமும், 2–வது ஆட்டத்தில் 0–1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசிடமும் தோல்விற்றது.
 
இந்நிலையில் கோவா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் வெற்றியை பெறுவது சென்னை அணிக்கு சவாலானதே.இந்நிலையில், தொடர் தோல்வியை சென்னையின் எப்.சி. அணி தவிர்க்குமா என்பதை பொருந்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
 
இதுவரை நடந்த 8 லீக் ஆட்டங்களில் புனே அணி 6 புள்ளியுடனும் கோவா, கேரளா, கொல்கத்தா அணிகள் தலா 4 புள்ளியுடனும். டெல்லி 3 புள்ளியுடனும் மும்பை 1 புள்ளியுடனும் உள்ளன. ஆனால் சென்னை அணி புள்ளி எதுவும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.