1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 28 நவம்பர் 2015 (12:22 IST)

ஐஎஸ்எல் தொடரில் அரையிறுதிக்குள் நுழைந்தது கொல்கத்தா அணி.

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடரில், புனே அணியை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது கொல்கத்தா அணி.


 
 
நேற்றிரவு கொல்கத்தாவில் அரங்கேறிய 48-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணியுடன் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தா அணி மோதியது. ரசிகர்களின் ஆரவரத்துடன் தொடங்கிய ஆட்டத்தில் கொல்கத்தா அணி 9வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தியது. கொல்கத்தா இயான் ஹூமே முதல் கோலை அடித்தார். 
 
தொடர்ந்து அவர் ஆட்டத்தின் 48, 83-வது நிமிடங்களிலும் இயான் ஹூமே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்த தொடரில் அவரது கோல் எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது. பின்னர் ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் புனே அணி ஆறுதல் கோல் அடித்தனர். 
 
ஆட்டநேர முடிவில் கொல்கத்தா அணி 4-1 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி இந்த தொடரில் தனது 7வது வெற்றியை பதிவு செய்தது. மேலும், முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. 
இன்று நடக்கும் ஆட்டத்தில் கவுகாத்தி-டெல்லி அணிகள் மோதுகின்றன.