Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோனியின் கேப்டன் பதவியை கைப்பற்றிய இளம் வீரர்

Last Modified வியாழன், 1 பிப்ரவரி 2018 (05:01 IST)
ரஞ்சித் கோப்பை போட்டிக்கு இணையானது விஜய்ஹசாரே போட்டி. இந்த போட்டித்தொடர் பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஜார்கண்ட் அணிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தோனிதான் கேப்டனாக இருந்தார்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி கலந்து கொள்வதால், இந்த முறை ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக இளம் வீரர் இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய இவர் வரும் ஐபிஎல் போட்டியிலும் விளையாடவுள்ளார். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி 6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :