வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. விளையாட்டு
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 17 ஏப்ரல் 2014 (11:05 IST)

ஐபிஎல். கிரிக்கெட்: மும்பை வீழ்ந்தது; கொல்கட்டா வென்றது!

அபுதாபியில் நேற்று நடைபெற்ற 7வது ஐபிஎல். கிரிக்கெட் தொடர் முதல் ஆட்டத்தில் கம்பீர் தலைமையிலான கொல்கட்டா அணி ரோகித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
பிட்ச் சற்று வித்தியாசமானது. பசுந்தரை ஆட்டக்களமாக அமைய, மும்பை அணியில் லசித் மலிங்கா நன்றாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கொல்கட்டா அணியில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகளை 20 ரன்களுக்குக் கைப்பற்றினார். வயதானாலும் ஜாக் காலிஸின் 72 ரன் இன்னிங்ஸ் கொல்கட்டாவின் வெற்றியை தீர்மானித்தது.
 
பந்து வீச்சில் மோர்னி மோர்கெல் அசத்தினார் மும்பையால் அதிரடி துவக்கம் காண முடியவில்லை.
 
பாண்டே, காலிஸ் அதிரடியில் கொல்கட்டா 163 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைபற்றியது. மும்பை அணி 122 ரன்களுக்கு சுருண்டது.
 

கவுதம் கம்பீர் 8 பந்துகள் தட்டுத் தடுமஆறி கடைசியில் ரன் எடுக்க முடியாமல் மலிங்காவின் துல்லிய யார்க்கருக்கு பவுல்டு ஆனார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் சதம் கண்ட இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற மணீஷ் பாண்டே காலிஸுடன் இணைந்து இருவரும் 131 ரன்களைச் சேர்த்தனர்.
 
காலிஸாலும் துவக்கத்தில் ஒன்றும் அடிக்க முடியவில்லை 14வது ஓவர் முடிவில் அவர் 31 பந்துகளில் 34 ரன்களையே எடுத்திருந்தார். இந்த சமயத்தில்தான் மலிங்கா ஷாட் ஃபைன் லெக்கில் காலிஸ் கொடுத்த கேட்சைக் கோட்டைவிட்டார். அதன் பிறகு காலிஸின் உள்ளே அரக்கன் புகுந்து விட்டான். 13 பந்துகளில் 37 ரன்களை விளாசித் தள்ளினார் காலிஸ்.
 
பிராக்யன் ஓஜாவை ஒரே ஓவரில் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாசினார் காலிஸ். பாண்டே மலிங்காவின் ஸ்லோ பந்தை ஒரு மிகப்பெரிய சிக்சர் விளாசினார். மலிங்கா தன் கடைசி ஓவரில் காலிஸ், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரை வீழ்த்தினார். கடைசியில் சூர்யகுமார் யாதவ் இறங்கி சாதுரியமனா சில ஷாட்களை ஆடி 13 ரன்கள் சேர்க்க கொல்கட்டா 163/5 என்று முடிந்தது.

ஜாகீர் கான் 4 ஓவர்களில் 23 ரன்களுக்கு ஒரு விக்கெட், மலிங்கா 4 விக்கெட்டுகள். இலக்கைத் துரத்திய மும்பை அணியின் துவக்க வீரர் மைக் ஹஸ்ஸி 13 பந்துகளில் 3 ரன்களையே எடுத்து நரைன் பந்தில் பவுல்டு ஆனார்.
 
மும்பையின் சிறந்த வீரர்களாந்ன ரோகித் சர்மா மற்றும் அம்பட்டி ராயுடு இணைந்து முயற்சி செய்தனர், பந்து ம்ட்டைக்கு வரவில்லை, பந்து வீச்சும் அபாரம், இதனால் ரன் விகிதம் குறையத் தொடங்கியது. இருவரும் இணைந்து 41 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தனர். ரோகித் காலிஸின் கேட்சிற்கு மோர்கெலிடம் வீழ்ந்தவுடன் ஆட்டம் ஏறத்தாழ மும்பைக்கு போனதாகிவிட்டது.
 
ஆனால் உலக சாதனை அதிவேக சத நாயகன் கோரி ஆண்டர்சன், அதிரடி மன்னன் போலார்ட் இருக்கும் வரை நாம் ஒன்றும் கூறிவிட முடியாதே. மும்பைக்குத் தேவை 28 பந்துகளில் 63 ரன்கள். ஆனால் இருவரையும் நரைன் பாடாய்ப்படுத்தி விட்டார். ஒன்றும் முடியவில்லை மும்பை தோற்றது.
 
ஆட்ட நாயகனாக ஜாக் காலிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
 
இன்றைய ஆட்டம்: டெல்லி Vs பெங்களூர் - ஷார்ஜா - இரவு 8 மணி.