1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (04:39 IST)

கடைசி பந்தில் த்ரில் வெற்றி: முதல் இடம் பிடித்தது பஞ்சாப்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22வது போட்டியில் டெல்லி அணியை பஞ்சாப் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ரன்கள் அடித்தது. பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் சுமாராகவே விளையாடினர்.
 
144 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி நிதானமாகவே ரன்களை சேர்த்தது. அந்த அணியில் எஸ்.எஸ்.ஐயர் மட்டும் 57 ரன்கள் அடிக்க கேப்டன் காம்பீர் உள்பட  மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்
 
கடைசி ஓவரில் 17 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் மிஸ்ரா மற்றும் எஸ்.எஸ்.ஐயர் களத்தில் இருந்தனர். இரண்டாவது பந்தில் சிக்ஸரும், 4வது பந்தில் 2 ரன்களும், 5வது பந்தில் 4 ரன்களும் அடித்த நிலையில் கடைசி பந்தில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி பந்தில் எஸ்.எஸ்.ஐயர் அவுட் ஆனதால் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. 
 
பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் அங்கிட் ராஜ்புட் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 10 புள்ளிகளூடன் முதலிடத்தில் உள்ளது.