1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 4 ஜூலை 2015 (19:35 IST)

36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மகளிர் அணி மகத்தான வெற்றி

இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஜப்பானை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
 

 
மகளிருக்கான உலக ஹாக்கி பிளே-ஆப் சுற்று இன்று நடைபெற்றது. இதில், 10ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பான் அணியும், 13ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணியும் மோதின. இந்திய அணி தனக்கு கிடைத்த நிறைய வாய்ப்புகளை வீணடித்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.
 
பிறகு, ஷூட் அவுட் முறை நடைபெற்றது. இதன் முடிவில் ஜப்பான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி தோற்கடித்தது. இதையடுத்து, 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது.
 
இறுதியாக இந்திய மகளிர் ஹாக்கி அணி 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் விளையாடியது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஹாக்கி ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி விளையாடும்.