1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By caston
Last Modified: சனி, 29 ஆகஸ்ட் 2015 (16:15 IST)

36 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி

ஐரோப்பிய மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஸ்பெயினை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 36 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 1980 இல் தகுதி பெற்றது. கடந்த ஜூலை மாதம் நடந்த உலக ஹாக்கி லீக் அரை இறுதியில் இந்திய அணி 5–வது இடத்தை பிடித்து தகுதி பெறுவதற்கான நிலையை எட்டியது.

இந்நிலையில் இங்கிலாந்து ஸ்பெயினை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் ஒலிம்பிக் போட்டி தகுதி உறுதியாகி விட்டது. இதை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் தேசிய விளையாட்டு மற்றும் தயான் சந்த் பிறந்த தினமான இன்று அறிவித்தது வரலாற்று சிறப்பாகும். இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒலிம்பிக் தகுதி பெற்று தென் கொரியா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது.