வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ashok
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (11:23 IST)

தெற்காசிய போட்டி: இறுதிப் போட்டியில் இந்திய கால்பந்து அணி

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய கால்பந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.


 
 
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்றும் வரும் 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் பிரிவு கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பங்களாதேஷ் அணியுடன், இந்திய அணி மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 22வது நிமிடத்தில் இந்திய வீரர் உதந்தா சிங் கோல் அடித்து, இந்திய அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். 39-வது நிமிடத்தில் ஜெர்ரி கோல் அடிக்க இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார முன்னிலை பெற்றது. 63-வது நிமிடத்தில் ஜெயேஷ் ரானே கோல் அடித்து இந்திய அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
 
மேலும், மகளிர் பிரிவு கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய மகளிர் கால்பந்து அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டத்தில் டிரா செய்தால், பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி ஆடியது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.