Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

Caston
Last Updated: செவ்வாய், 9 ஜனவரி 2018 (15:08 IST)
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் யூசப் பதான் 5 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 
இந்திய கிரிக்கெட் வீரர் யூசப் பதான் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டது சோதனையில் தெரியவந்துள்ளது. டெர்பியூட்டலில் உள்ள ப்ரோசெட் என்ற மருந்தை உட்கொண்டுள்ளார். டெர்பியூட்டலின் தடை செய்யப்பட்ட பொருளாக இருந்தாலும் முன் அனுமதி பெற்றால் பயன்படுத்தி கொள்ளலாம்.
 
ஆனால் யூசப் பதான் அணியின் மருத்துவரிடம் அனுமதி பெறாமல் உட்கொண்டுள்ளார். இந்த டெர்பியூட்டலின் பொதுவாக இருமல் மருந்தில் காணப்படும் ஒன்று. இதுகுறித்த பதானின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டது.
 
யூசப் பதான் கடந்த அக்டோபர் மாதம் முதல் எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில் இவர் 5 மாதம் காலம் இடைநீக்கம் செய்யப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த தடைகாலம் ஆகஸ்ட் 15ஆம் தேதி 2017 முதல் ஜனவரி 14ஆம் தேதி 2018 வரை ஆகும்.


இதில் மேலும் படிக்கவும் :