1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2018 (14:16 IST)

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது இந்தியா!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நான்காவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.


19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே இறுதி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
 
47.2 ஓவர் முடிவில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 38.5 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்திய 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது.
 
மன்ஜோட் கல்ரா சதம் விளாசினார். சிவா சிங் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தியா நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.