Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தென் ஆப்பரிக்காவை காலி செய்த இந்தியா

India
Last Updated: ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (19:46 IST)
தென் ஆப்பரிக்கவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அணி 32.2 ஓவர் முடிவில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
 
சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சூழலில் தென் ஆப்பரிக்க எளிதாக வீழ்ந்தது. இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் அரை சதம் விளாசினார். தென் ஆப்பரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ் காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளார். டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டியின் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் மூன்று ஒருநாள் போட்டியில் ஏற்கனவே விலகிவிட்டார். 
 
இரண்டு மூத்த அனுபவ மற்றும் சிறப்பான வீரர்கள் இல்லாத தென் ஆப்பரிக்க இந்தியாவிடம் எளிதாக தோல்வி அடைந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :