வாஷ் அவுட்டை தவிர்க்குமா இந்திய அணி??

Last Modified புதன், 24 ஜனவரி 2018 (21:54 IST)
இந்தியா தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நினைத்தது போல இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.

கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமாக தோற்றது. அதேபோல் இரண்டாவது போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதனால் இந்தியா டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

இன்று 3வது டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பர்க்கில் நடக்கிறது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த முறையும் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. வீரர்கள் அனைவரும் வரிசையாக அவுட் ஆனார்கள். கோஹ்லி அதிகபட்சமாக 54 ரன்னும், புஜாரா 50 ரன்னும் எடுத்தார்கள்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 187 ரன்கள் மட்டும் எடுத்தது. எளிதான இலக்கை நோக்கி தென் ஆப்ரிக்கா விளையாடி வருகிறது. முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 6 ரன் எடுத்துள்ளது தென் ஆப்ரிக்கா அணி.

இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெறுமா? வாஷ் ஆவுட்டை தவிர்க்குமா? என்பதை நாளைய ஆட்டங்கள் முடிவு செய்யும்.


இதில் மேலும் படிக்கவும் :