வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (06:50 IST)

ஈட்டி எறிவதில் இந்திய வீர்ர் உலக சாதனை

ஈட்டி எறியும் போட்டியில் 86.48 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, உலக சாதனை படைத்துள்ளார்.


 

 
போலந்து நாட்டில் உள்ள பிட்காசஸ் நகரில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டி நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவின் நீரஜ் யாதவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
 
மேலும் இப்போட்டியில் 86.48 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்ததன் மூலம் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் அவர் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 84.69 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்ததே உலக சாதனையாக இருந்தது.