வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2016 (12:16 IST)

இந்திய ஹாக்கி கேப்டன் ’பலாத்காரம்’ செய்ததாக காதலி புகார்

இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தார் சிங் தன்னை உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தியதாக அவரது காதலி புகார் தெரிவித்துள்ளார்.


 

 
பிரிட்டிஷ் வசித்துவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 21 வயதான அந்த பெண் லுதியான காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ளார். சர்தார் சிங் தன்னை உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தியதாகவும் அதனால் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் கூறுகையில், “நானும் சர்தார் சிங்கும் நான்கு ஆண்டுகளாக காதலர்களாக பழகி வந்துள்ளோம். இப்போது எனக்கு துரோகம் இழைத்துவிட்டார். ஏற்கனவே பலமுறை என்னை அவர் பயன்படுத்தி இருக்கிறார். இப்போது எனது இதயம் நொறுங்கிவிட்டது.
 
நாங்கள் திருமணம் செய்துகொளவதாக இருந்தோம். ஆனால், தற்போது கடந்த மூன்று மாதங்களாக எனது தொலைபேசி அழைப்பிற்கோ அல்லது குறுந்தகவலுக்கோ பதில் அளிப்பதில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.