Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திய அணி ரொம்ப மோசம்; எப்படி போட்டாலும் அடிகிறாங்க: புளம்பி தள்ளும் வங்கதேச பவுலர்!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:30 IST)
இந்திய ஆடுகளம் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது என வங்கதேச வீரர் தஸ்கின் அஹமது புலம்பியுள்ளார்.

 
 
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இந்த டெஸ்ட் ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
 
இந்திய அணிக்கு துவக்க வீரர் முரளி விஜய், கேப்டன் கோலி ஆகியோர் சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
 
இதுகுறித்து தஸ்கின் அஹமது கூறுகையில், இந்திய ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்ததை விட வேகப்பந்து வீச்சுக்கு மிகவும் மோசமானதாக உள்ளது. இந்த நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பொறுமையை கடைபிடிப்பதைத்தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றார். 
 


இதில் மேலும் படிக்கவும் :