Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியாவுக்கு கிடைக்கும் ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு??


Sugapriya Prakash| Last Modified வியாழன், 16 பிப்ரவரி 2017 (11:26 IST)
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 அணியாக உள்ள இந்திய அணிக்கு ரூ.6 கோடி பரிசு கிடைக்கவுள்ளது.

 
 
வரும் ஏப்ரல் மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாகவுள்ள அணிக்கு ரூ.6 கோடி ஐ.சி.சி., சார்பாக பரிசாக அளிக்கப்படும். 
 
சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் 208 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில், 121 புள்ளிகளுடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முதலிடத்தில் உள்ளது.
 
இந்நிலையில் இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. தற்போது அஸ்திரேலியா அணி 109 புள்ளிகளுடம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 
இதில் நம்பர் 1 இடத்தை பிடிக்க ஆஸ்திரேலிய அணி, 3-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும். இந்திய அணி 1 போட்டியில் வென்றாலும் ஆஸ்திரேலிய அணியின் நம்பர் 1 கனவு பலிக்காது.


இதில் மேலும் படிக்கவும் :