ஹோல்டருக்கு விளையாடத் தடை – ஐசிசி அதிரடி…

Last Modified திங்கள், 4 பிப்ரவரி 2019 (15:32 IST)
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில்  செயிண்ட் லூசியாவில் நடக்க இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  விளையாட மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. ஆண்டிகுவாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக மெதுவாகப் பந்து வீசியதும், குறித்த நேரத்துக்குள் ஓவர்களை வீசாமல் தாமதித்தற்காகவும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது டெஸ்ட்டில் ஹோல்டருக்குப் பதிலாக பிராத்வெயிட் கேப்டன் பதவியேற்பார் என்று மேற்க்ந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :