1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 18 ஜூன் 2017 (21:35 IST)

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடரில் இந்தியா 7-1 என்ற கோல்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.



 


ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடரில் இன்றைய போட்டி போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா 7-1 என பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், தல்விந்தர் சிங் 2 கோல்களும், ஆகாஷ் தீப் இரண்டு கோல்களும், பிரதீப் மோர் ஒரு கோலும் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது உமர் பூட்டா ஒரு கோலும் அடித்தனர்.