வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 ஜூலை 2018 (15:10 IST)

போலி சான்றிதழ்; பறிபோகும் டிஎஸ்பி பதவி? கவலையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஹர்மன்பிரீத் கௌர் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களை சமர்பித்ததால் அவரது டிஎஸ்பி பதவில் பறிபோகும் நிலையில் உள்ளது.

 
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நடசத்திர வீராங்கனை ஹர்மன்பிரீத் கௌர். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதற்காக இவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
 
அதோடு ரயில்வே துறையில் பணி வழங்கப்பட்டது. ஆனால் ஹர்மன்பிரீத் தனக்கு பஞ்சாப் மாநில டிஎஸ்பி-யாக பணியாற்றவே விருப்பம் என்று தெரிவித்தார். அவரது கோரிக்கைப்படி பஞ்சாப் முதல்வர் கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி அவருக்கு டிஎஸ்பி பதவிக்கான நட்சத்திரங்களை சீருடையில் குத்திவிட்டனர்.
 
ஹர்மன்பிரீத் பணியில் சேருவதற்கு முன் தனது பட்டப்படிப்பு சான்றிதழ்களை சமர்பித்தார். ஆனால் இந்த சான்றிதழ்கள் போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனால் ஹெர்மன்பிரீத் தனது டிஎஸ்பி பதவியை இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போலி சான்றிதழ் விவகாரம் பஞ்சாப் முதல்வர் கவனத்துக்கு சென்றுள்ளது.