Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கங்குலிக்கு கடிதம் மூலம் வந்த கொலை மிரட்டல்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 10 ஜனவரி 2017 (13:17 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற சவுரவ் கங்குலி, மேற்கு வங்க மாநில கிரிக்கெட் வாரியத் தலைவராகச் பதவி வகிக்கிறார். மேலும், இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். 
 
வரும் ஜனவரி 19ம் தேதியன்று மேற்கு வங்கத்தில் உள்ள மித்னாப்பூரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கல்லூரிகளுக்கு இடையிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
 
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் சவுரவ் கங்குலி கொலை செய்யப்படுவார் என, மர்ம நபர் ஒருவர் அவரது தாயாருக்கு கடிதம் மூலமாக, மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன்பேரில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :