Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோனி பேட்டிங்கில் சிறந்த வீரரா? கங்குலி சர்ச்சை கருத்து!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 13 ஏப்ரல் 2017 (12:59 IST)
முன்னாள் வெற்றி கேப்டன் தோனி 20 ஒவர் போட்டிகளில் மிகச்சிறந்த வீரர் இல்லை என்று சவுரவ் கங்குலி விமர்சித்துள்ளார்.

 
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தோனி குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். கங்குலி கூறியதாவது, தோனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த சாம்பியன் வீரர். ஆனால், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் அவர் மிகச்சிறந்த வீரரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. 
 
தோனி மிகச்சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் என்று உறுதியாக கூற முடியாது. 20 ஓவர் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளில் தோனி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
 
நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், தோனி பேட்டிங்கில் கடுமையாக திணறி வருவதால் கங்குலி தோனியின் 20 பேட்டிங் திறன் குறித்து விமர்சனம் செய்துள்ளார் என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :