Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெண்டாஸ்டிக் போர்: கோலி தகுதியானவரா? கங்குலி கணிப்பு...

Ganguly and Kohli
Last Modified வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (18:45 IST)
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் போட்டியில் கோட்டை விட்டாலும் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பலவகையில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி இந்தியாவின் பெண்டாஸ்டிக் போர் கூட்டணியில் சேரும் தகுதி கோலிக்கு உள்ளதா என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.


இது குறித்து கங்குலி பின்வருமாறு கூறினார். தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த பின் இந்திய அணி மிகச்சிறாப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக கேப்டன் கோலியின் ஆட்டம் வியக்க வைக்கிறது. இந்தியாவின் பெண்டாஸ்டிக் போர் என அழைக்கப்படும் சச்சின், டிராவிட், சேவக், லட்சுமண் கூட்டணியில் இணையும் தகுதி தற்போது கோலிக்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :