Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எப்பவுமே பலிகடா இவர்தான்; முன்னாள் கேப்டன் வருத்தம்

Dhawan
Last Updated: சனி, 13 ஜனவரி 2018 (19:32 IST)
இந்திய அணியின் பலிகடா எப்பவுமே தவான்தான் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

 
தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணி வீரர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவானுக்கு பதிலாக ராகுல், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷாந்த் சர்மா, சாஹாவுக்கு பதிலாக பார்த்தீவ் பட்டேல அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியதாவது:-
 
இந்திய அணியின் பலிகடா எப்பவுமே தவான்தான். ஒரே ஒரு மோசமான போட்டி போதும் அவரை வெளியேற்ற. அதான் தற்போது நடந்துள்ளது. ஆனால் கேப்டவுனில் முதல் நாளில் 3 விக்கெட் கைப்பற்றிய புவனேஷ்வர் குமாரை நீக்க அவசியமில்லை. பும்ரா அல்லது ஷமிக்கு பதிலாக இஷாந்தை தேர்வு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :