இன்று நியூசிலாந்துடன் முதல் ஒருநாள் போட்டி! பயப்படாமல் சவாலை சந்திக்க தயார்! விராட் கோலி பேடடி

VM| Last Modified புதன், 23 ஜனவரி 2019 (11:53 IST)
நேப்பியரில்  இந்தியா - நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்க உள்ளது,


 
ஆஸ்திரேயாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி அங்கிருந்து பக்கத்து நாடான நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. அங்கு நியூசிலாந்து அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது, முதல் போட்டி நேப்பியரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.  நியூசிலாந்து அணி சொந்த ஊரில் மிக வலிமையான அணியாக வலம் வருகிறது. கடந்த முறை நியூசிலாந்து சென்ற இந்தியா படுதோல்வி அடைந்து நாடு திரும்பியது,   இந்நிலையில், நியூசிலாந்து அணி இந்த முறை எத்தனை ரன்கள் குவித்தாலும் மேல் குவித்தாலும் பயப்படாமல் என்றும், அவர்களின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்,
 
இது குறித்து கோலி கூறுகையில் எங்களுடைய திறமை எங்களுக்கு தெரியும், நாங்கள் நியூசிலாந்தின் எல்லா வகையான சவாலுக்கும் தயாராகவே இருக்கிறோம். நியூசிலாந்து அணி எப்போதும் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் விளையாடும். அவர்கள் 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் போது, பயந்து விடக்கூடாது. அது தான் முக்கியம். நமது திறமை மீது நம்பிக்கை வைத்து இலக்கை விரட்டி பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதே போல் முதலில் பேட்டிங் செய்தால் மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதில் முனைப்பு காட்ட வேண்டும். கடந்த முறை (2014-ம் ஆண்டு) இங்கு விளையாடிய போது இது போன்ற சூழலில் பதற்றம் தொற்றிக்கொண்டது. இலக்கு 300 ரன்களை நெருங்கினாலும் கூட பதற்றம் இன்றி அமைதி காக்க வேண்டும். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சாதிக்க ஆர்வமாக உள்ளோம் என்றார், 
 
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
 
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), டோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் அல்லது கலீல் அகமது, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல்.
 
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், காலின் டி கிரான்ட்ஹோம் அல்லது மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, லோக்கி பெர்குசன் அல்லது டக் பிரேஸ்வெல், டிரென்ட் பவுல்ட், சோதி.
 
இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :