1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (12:19 IST)

பெனால்டி ஷுட்டில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா

உலகக் கோப்பை கால்பந்தின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பெனால்டி ஷுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி, அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.



நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. எனவே கூடுதலாக 30 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் பெனால்டி ஷுட் வழங்கப்பட்டது. அதில் தனது நான்கு பெனால்டி ஷுட்களையும் வெற்றிகரமாக அர்ஜென்டினா கோலாக்கியது.

மறுபுறம் நெதர்லாந்தின் நான்கு பெனால்டி ஷுட்களில் இரண்டை அர்ஜென்டினா கோல் கீப்பர் ரோமெரோ அபாரமாக பாய்ந்து கோல் விழாமல் தடுத்தார்.

இதனால் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆட்டநாயகனாக அர்ஜென்டினா கோல் கீப்பர் ரோமெரொ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெதர்லாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா 24 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.