வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 25 ஜூன் 2014 (11:12 IST)

உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து-கோஸ்டாரிக்கா போட்டி டிரா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து-கோஸ்டாரிக்கா ஆகிய இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இங்கிலாந்து மற்றும் கோஸ்டாரிக்கா அணிகள் மோதிய ஆட்டத்தின், 2 ஆவது நிமிடத்தில் கோஸ்டாரிக்கா அணியின் காம்பேல் கோல் அடிக்க தவறினார்.

37 ஆவது நிமிடத்தில் மீண்டும் காம்பேல் கோல் அடிக்க முயற்சி செய்து தோற்றுப் போனார். முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய போது, ஆட்டத்தின் 48 ஆவது நிமிடத்தில் கோஸ்டாரிக்காவின் காம்போவா கோல் அடிக்க தவறினார். ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் பார்க்லே பவுல் செய்தார்.

இந்நிலையில் 53 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் பார்க்லேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 90 நிமிடங்கள் முடிந்தவுடன் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்டநாயகனான கோஸ்டாரிகா நாட்டின் கோல் கீப்பரான நவாஸ் தேர்ந்தெடுக்கப்படட்டார்.