வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 26 ஜூன் 2014 (09:50 IST)

உலகக் கோப்பை கால்பந்து: இத்தாலி வீரரை கடித்த உருகுவே வீரர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இத்தாலி வீரரின் தோள்பட்டையைக் கடித்த உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ்க்கு தடை விதிக்கப்படுகிறது.

உலகக் கோப்பை கால்பந்தில் ‘டி’ பிரிவில் இத்தாலிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

உருகுவே அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ், ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இந்தநிவையில், இத்தாலி வீரர் ஜியார்ஜியோ செலினியின் இடது தோள்பட்டை மீது திடீரென கடித்தார்.

இதனால் நிலைகுலைந்து போன செலினி மைதானத்தில் விழுந்தார். பின்னர் சுவாரஸ் கடித்த இடத்தில் பற்களின் தடங்கள் பதிந்து இருப்பதை, பனியனை கழற்றி செலினி காண்பித்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடுவர் மார்கோ ரோட்ரிகசிடம் முறையிட்டார்.

பொதுவாக கால்பந்தில் எதிரணி வீரர்களை காலால் உதைப்பது, பிடித்து இழுப்பது, காலைத் தடுப்பது போன்றவை அவ்வப்போது நடப்பதுண்டு. ஆனால் சுவாரஸ் கடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் போது பிரானிஸ்லாவ் இவானோவிச்சை என்ற வீரரை கடித்ததற்காக 10 போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல 2010ஆம் ஆண்டு நெதர்லாந்தின் அஜக்ஸ் கால்பந்து கிளப்பாக விளையாடிய போது எதிரணி வீரரின் கழுத்தை கவ்வியதற்காக வெளியேற்றப்பட்டார்.

இந்த கடி சம்பவத்தால், கால்பந்து போட்டியில் விளையாட லூயிஸ் சுவாரஸ்க்கு 6 மாரங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.