1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2016 (12:33 IST)

இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சந்திமால் மருத்துவமனையில் அனுமதி

இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் மற்றும் துணை கேப்டனாகவும் இருப்பவர் தினேஷ் சந்திமால். 

 
இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்திமாலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேலும் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. 
 
பரிசோதனைகள் முடிந்த பின்னரே அவரது உடல் நலம் குறித்து கருத்து கூற முடியும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.