வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Bharathi
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2015 (11:15 IST)

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி டைனமோஸ்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணி வீழ்த்தியது.


 
 
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் டெல்லி டைனமோஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. 
 
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆட்டத்தின் 87-ஆவது நிமிடத்தில், டெல்லி வீரர் ரிச்சர்டு காட்ஸி கோல் அடித்தார். இதனால் கேரளா அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் டெல்லி அணி வீழ்த்தியது.