யுவ்ராஜை ஏன் எடுக்கவில்லை – சி.எஸ்.கே. அணி நிர்வாகத்தை அலறவிட்ட ரசிகர்கள்

Last Updated: புதன், 19 டிசம்பர் 2018 (15:30 IST)
ஐபிஎல் 2019 ஆம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. அதில் 60 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

ஐபிஎல் 2019 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாடுகளில் நடக்க இருக்கின்றன. அதற்கான நாட்டைத் தேர்வு செய்வதில் பிசிசிஐ நிர்வாகம் தீவிரமாக உள்ளது. இதனிடையில் அடுத்த ஆண்டு அணிகளுக்கான வீரர்கள் ஏலம் நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது.

இதில் இந்திய வீரர் யுவ்ராஜை எடுக்க அணிகள் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் சுற்று ஏலத்தில் அவரை யாருமே ஏலம் கேட்கவில்லை. அதையடுத்து மறு சுற்று ஏலத்தில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான 1 கோடிக்கே எடுத்தது.


அதனால் சி.எஸ்.கே ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். ஏலத்திற்கு முன்பே சி.எஸ்.கே நிர்வாகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெருவாரியான ரசிகர்கள் யுவியை சி.எஸ்.கே யில் எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். ஆனால் ஏலத்தில் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த அணி நிர்வாகத்தை சிலர் டிவிட்டரில் வசைபாட ஆரம்பித்தனர்.

யுவ்ராஜை ஏன் எடுக்கல, மோஹித் ஷர்மாவுக்கு 5 கோடி.. யுவ்ராஜ 1 கோடிக்கு எடுக்க முடியலயா ? எனக் கேள்வி கேட்க.. ஒரு சில ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு கெட்ட வார்த்தை அர்ச்சனை செய்தனர். இதனால் கலக்கமுற்ற சி.எஸ்.கே. ரசிகர்களைத் தனிக்கும் விதமாக மனதைத் திருடிவிட்டாய் படத்தில் வரும் வரும் வடிவேலுக் காமெடியை ஷேர் செய்து ரசிகர்களின் கோபத்தைக் கொஞ்சம் தனித்தது.


 இதில் மேலும் படிக்கவும் :