இன்றைய போட்டியில் தோனி இல்லை! அதிர்ச்சி தகவல்

Last Modified வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (19:32 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முக்கிய லீக் போட்டி நடைபெறவுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி மும்பையை வென்றதில்லை என்ற மோசமான ரிக்கார்டு இன்று உடையுமா? என்ற எதிர்பார்ப்பில் சென்னை ரசிகர்கள் உள்ளனர்
இந்த நிலையில் இன்றைய போட்டியில் தல தோனி ஆடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தோனிக்கு காய்ச்சல் காரணமாக அவர் ஓய்வு எடுத்துள்ளார். தோனிக்கு பதில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து இன்னும் சிறிது நேரத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :