வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (12:59 IST)

2019 உலகக்கோப்பை வரை கிரிக்கெட் களத்தில் தாக்கு பிடிப்பாரா தோனி?

2019 கிரிக்கெட் உலகக்கோப்பை வரை தோனி கிரிக்கெட் களத்தில் தாக்கு பிடிப்பாரா என பல விமர்சனங்கள தோனியை எதிர்த்து எழுந்துள்ளது. 


 
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டி20, 50 ஓவர், சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்ற தந்த ஒரே கேப்டன் ஆவார்.
 
தோனிக்கு தற்போது 36 வயதாகிவிட்டது. தன் மீது எழுந்த விமர்சனங்கள் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து அதிரடியாக ஓய்வை அறிவித்தார். மேலும், ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். 
 
இந்நிலையில், 2019 உலகக்கோப்பை வரை தோனி தாக்கு பிடிப்பாரா என அவர் மீது மீண்டும் விமர்சனங்கள் எழ துவங்கியுள்ளது. தோனி, தனக்கு முழுதகுதி இருப்பதாகவும் 20 மீட்டர் தூரத்தை 2.91 வினாடிகளில் கடந்ததாக தெரிவித்திருந்தார். 
 
இதேபோல், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹசி தோனிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என தெரிவித்திருந்தார். ஆனால், உலகக்கோப்பை விளையாடும் போது தோனிக்கு 38 வயதாகிவிடும் எனவே தோனி ஓய்வை அறிவித்துவிடுவார் என பலர் கூறிவருகின்றனர்.