Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஸ்வினுக்கு இரண்டாவது பெண் குழந்தை: மனைவி நெகிழ்ச்சி!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (15:46 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துப் புயல் அஸ்வினின் மனைவி பிரீத்திக்கு கடந்த 21ம் தேதியே பெண் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும்  தற்போது தான் பிரீத்தி அஸ்வின் தகவலை வெளியிட்டுள்ளார். 

 
 
அஸ்வின் தொடர்ந்து கிரிக்கெட்டில் பிசியாக இருந்ததால் செய்தியை தாமதமாக அறிவிக்க நேரிட்டதாக பிரீத்தி கூறியுள்ளார். 2016ம் ஆண்டின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக கலக்கலாக வருடத்தை முடிக்கும் அஸ்வினுக்கு சிறந்த பரிசாக அவரது பெண் குழந்தை வந்து சேர்ந்துள்ளது. 
 
சென்னையில் வைத்து இங்கிலாந்து அணியை இந்தியா 5வது டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய அடுத்த நாள் டிசம்பர் 21ம் தேதி பிரீத்திக்கு குழந்தை பிறந்துள்ளது.
 
டெஸ்ட் போட்டி முடிந்த அடுத்த நாள் பிறந்ததால் அப்பாவின் (அஸ்வினின்) "கிரிக்கெட்டர் ஆப் தி இயர்" தருணத்தை பங்கு போட விரும்பாமல் இப்போது அனைவருக்கும் செய்தியை சொல்கிறோம் என்று டிவீட்டில் தெரிவித்துள்ளார் பிரீத்தி.


இதில் மேலும் படிக்கவும் :