வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (08:16 IST)

காமன்வெல்த் விளையாட்டு: வட்டு எறிதலில் விகாஷ் கவுடா தங்கம் வென்றார்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் வட்டு எறிதலில் இந்திய வீரர் விகாஷ் கவுடா தங்கம் வென்றார். 13 தங்கம் உட்பட 47 பதக்கங்களுடன் இந்தியா 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

போட்டியின் 8 ஆவது நாளில் இந்தியாவுக்கு ஆடவர் வட்டு எறிதல் பிரிவில் தங்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 63.64 மீட்டர் தூரம் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் விகாஷ் கவுடா தங்கம் வென்று சாதனை படைத்தார்.

மல்யுத்தப் போட்டிகளின் கடைசி நாளான வியாழக்கிழமை, ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் யோகேஷ்வர் தத், இலங்கையின் சமரா பெரேராவை எதிர் கொண்டார்.

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து புதுவிதமான யுத்திகளைப் பயன்படுத்தி வரும் யோகேஷ்வர், இலங்கை வீரரை எளிதில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச் சுற்றில் யோகேஷ்வர் தத், கனடாவின் பேல்ஃபோரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றனர்.

மகளிருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் பபிதா குமாரி காலிறுதியில் ஸ்காட்லாந்தின் கேத்ரின் மார்ஷை வீழ்த்தினார். பின் அரையிறுதியில் இங்கிலாந்தின் லூயிஸா போரகோவஸ்காவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச் சுற்றில் அவர் கனடாவின் லவர்டுரைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிருக்கான 63 கிலோ எடைப்பிரிவில், கேமரூன் வீராங்கனை எபங்கா மெதலாவுக்கு எதிராக இந்தியாவின் கீதிகா ஜாகர், அரையிறுதியில் 2 நிமிடங்கள் 45 விநாடிகளில் வேல்ஸ் நாட்டின் கனோலியைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவில் வெண்கலத்துக்கான போட்டியில் இந்திய வீரர் பவன் குமார் போட்டியிடுகிறார்.

இந்தியா மல்யுத்தத்தில் இதுவரை 5 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதற்கு முன் இன்றைய மல்லியுத்த போட்டியில் 5 தங்கம், 1 வெள்ளி பதக்கம் பெற்று இந்தியா சாதனைப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் 13 தங்கம், 20 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களுடன் இந்தியா 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.