1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (09:21 IST)

காமன்வெல்த்: 2 வெள்ளிப்பதக்கம், 1 வெண்கலப்பதக்கம் வென்றது இந்தியா

காமன்வெல்த் ஜூடோ போட்டியில் இரண்டு வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கலப்பதக்கத்தையும் இந்தியா வென்றுள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனையான சுசீலா லிக்மபம் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.

48 கிலோ எடைப்பிரிவினருக்கான ஜூடோ போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கனை ரெனிக்ஸ் தங்கம் வெல்ல இந்திய வீராங்கனையான சுசீலா லிக்மபம் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் ரெய்னர், மேயர் ஆகியோர் வெண்கலம் வென்றனர். ஆடவருக்கான 60 கிலோ எடைப்பிரிவினருக்கான ஜூடோ போட்டியில் இந்தியாவின் நவ்ஜோத் சனா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

52 கிலோ பிரிவுக்கான ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை வெண்கலப்பதக்கம் வென்றார். வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் கல்பனா தௌடம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட லெஜிண்டில்லை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.