வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. விளையாட்டு
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (11:58 IST)

கொல்கட்டா வீரர் லின் பிடித்த அபார கேட்சினால் தோற்றது பெங்களூரு!

கொல்கட்டா நிர்ணயித்த 151 ரன் இலக்கை துரத்திய பெங்களூரு 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. கடைசிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடிய டி வில்லியர்சை கொல்கத்தா அணி வீரர் லியன் அற்புதமான முறையில் கேட்ச் பிடித்து அவுட் செய்தார். இந்த ஒரு கேட்சால் கொல்கட்டா வெற்றி பெற்றது.
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 151 ரன்கள் இலக்கை பெங்களூரு நன்றாக சுலபமாக துரத்தி வந்தது. ஆட்டத்தின் பெரும்பகுதி ராயல் சாலஞ்சர்ஸ் வசமே இருந்தது.
 
கடைசியில் யுவ்ராஜ் சிங் அவுட் ஆனபோது கூட தேவைப்படும் ரன் விகிதம் கையை விட்டுப் போகவில்லை.
 
கடைசி ஓவர் துவங்கும்போது அதிரடி மன்னன் டிவிலியர்ஸ் கிரீசில் உள்ளார் ஆல்பி மோர்கெல் உள்ளார். இப்போது கூட கொல்கட்டா பக்கமே தோல்வி என்ற நிலை இருந்தது.
 
கடைசி ஓவர் 9 ரன்கள் தேவை. ஏற்கனவே சுனில் நரைன், மோர்னி மோர்கெல் ஓவர்கள் முடிந்து விட்டது. வினய் குமார் என்ற பெங்களூருக்கு அபாயமான பவுலரே கடைசி ஓவரி வீசினார். ஆனால் கிறிஸ் லின் பிடித்த அந்த கேட்ச் இன்னும் நீண்ட நாட்களுக்குப் பேசப்படும். அதுதா டிவிலியர்ஸை விழுங்கிய கேட்ச்.

டிவிலியர்ஸ் ஒரு ஷாட் அடித்தார் அது மிட்விக்கெட்டில் சென்றது அது சற்றே நீளமான பவுண்டரி. ஷாட் பலமாக இருந்தும் பந்து எல்லைக்கோட்டிற்கு மேல் செல்லாத அளவே இருந்தது. பந்து வருவதற்கு முன்பாகவே அங்கு நின்று கொண்டிருந்த கிறிஸ் லின் தடுக்கி விழுந்தார். ஆனாலும் மீண்டு எழுந்த லின் பின் பக்கமாக ஒரு ஹைஜம்ப் வீரர் போல் பாய்ந்து பந்தை பிடித்து விடாமல் கீழே விழுந்ததோடு, எல்லைக்கோட்டையும் தொடாமல் பார்த்துக் கொண்டார். எல்லைக்கோடு அருகில்தான் இருந்தது. 
டிவிலியர்ஸ் இந்த அபார, நம்ப முடியாத கேட்சிற்கு வெளியேற பெங்களூருவுக்கு 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை. ஆனால் ஆல்பி மோர்கெல் கிரீசில் இருந்தும் முடியவில்லை.
 
முன்னதாக பேட்டிங்கிலும் லின் அசத்தினார். 31 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்தார் அவர். காலிஸும் இவரும் இணைந்து 10 ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்ததே கொல்கட்டா 150 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தது. பெங்களூரு அணியில் வருண் ஆரோன் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 
ஒரே கேட்ச், ஒரு கேட்ச் பெங்களூரு அணிக்கு தோல்வியை ஏற்படுத்தியது.அந்தக் கேட்சைப் பிடித்த கிறிஸ் லின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இன்று 2 ஆட்டங்கள்: முதலில் ஐதராபாத் டெல்லி அணிகள் 4 மணி ஆட்டத்திலும் பிறகு சென்னை மும்பை அணிகள் 8 மணி ஆட்டத்திலும் மோதுகின்றன.