வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 28 நவம்பர் 2015 (12:31 IST)

பளுதூக்குதல் போட்டி: சீன வீராங்கனை புதிய உலக சாதனை

உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் சீன வீராங்கனை வெய் டெங் புதிய உலக சாதனை படைத்தார்.


 
 
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில், மகளிர்கான 63 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனை வெய் டெங் புதிய உலக சாதனை படைத்தார்.
 
மகளிர் 63 கிலோ எடைப்பிரிவில் கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 146 கிலோ எடையை தூக்கி உலக சாதனை படைத்தார். இதனை தொடர்ந்து ஸ்னாட்ச் என்ற முறையில் 113 கிலோவையும் சேர்த்து மொத்தம் 259 கிலோ தூக்கி தங்க பதக்கத்தையும்  வென்றார்.
 
கடந்த ஆண்டு தைவானைச் சேர்ந்தவர் கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 145 கிலோ தூக்கியதே இதுவரை சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.