வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (06:59 IST)

டி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அபார வெற்றி

கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் தமிழ்நாடு பிரிமியர் லீக் என்னும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில் நேற்று சேப்பாக்கம் அணியும் திருவள்ளூர் அணியும் மோதின



 
 
முதலில் பேட்டிங் செய்த திருவள்ளூர் வீரன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியின் மூலம் சேப்பாக்கம் அணி ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே கோவை கிங்ஸ், ஆல்பர்ட் தூத்துக்குடி அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.