Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை அணிக்கு முதல் வெற்றி

sivalingam| Last Modified வெள்ளி, 24 நவம்பர் 2017 (05:00 IST)
கடந்த சில நாட்களாக ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோதின

சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தோனியின் சென்னை அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை புரட்டி எடுத்தது. ஆட்டத்தின் முழு பகுதியையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சென்னை வீரர்கள் முதல் பாதியில் 2 கோல்களும், இரண்டாவது பாதியில் ஒரு கோலும் அடித்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

மொத்தம் பத்து அணிகள் விளையாடும் இந்த தொடரில் தற்போது சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு, டெல்லி, கோவா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :