வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 19 ஜூலை 2017 (19:38 IST)

தலையாட்டி பொம்மையாக மாறியதா பிசிசிஐ? அடுத்த கண்டிஷன் போட்ட ரவி சாஸ்திரி!!

ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வந்தது முதல் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. ரவி சாஸ்திரி ஏற்படுத்தும் மாற்றங்கள் அனைத்திற்கும் பிசிசிஐ சம்மதம் தெரிவித்து வருகிறது.  


 
 
ரவி சாஸ்திரி பவுலிங் கோச்சாக, அருண் பரத்தை நியமிக்க விரும்பினார். எனவே, கங்குலியின் கடும் எதிர்ப்பையும் மீறி அதை செய்து காட்டினார். 
 
தற்போது, தனது அடுத்த கண்டிஷனை முன்வைத்துள்ளார். இந்திய அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் வரவேண்டும் என்று ரவி சாஸ்திரி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ரவி சாஸ்திரிக்கு தற்போது எதிர் துருவமாக நிற்கும் கங்குலி இதற்கு என்ன கூறுவார் என்பது தெரியவில்லை. ஆனால், பெரும்பாலும் ரவி சாஸ்திரியின் கண்டிஷன் நிறைவேறிவிடும் என்று கூறப்படுகிறது.
 
முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவை விட ரவி சாஸ்திரிக்கு ஒரு கோடி அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பிசிசிஐ ரவி சாஸ்திரிக்கு எதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது பலருக்கும் புரியாமல் இருப்பதாக பேசப்படுகிறது.