1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (20:21 IST)

உசைன் போல்ட் அடுத்த அழகியுடன் கசமுசா [வீடியோ]

சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் ஜமைக்காவைச் சேர்ந்த மின்னல்வேக மனிதர் உசைன் போல்ட் 100மீட்டர், 200மீ மற்றும் 400மீ தொடர் ஓட்டம் ஆகிய மூன்றிலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
 

 
கடந்த சில தினங்களுக்கு முன் உசேன் போல்ட் ரியோ நகரை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவருடன் படுக்கை படுக்கையை பகிர்ந்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், நடன கிளப்பில் 10 பெண்களுடன் அவர் மிக நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோவும் வெளியானது.
 
இது அவரது காதிலிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இதை அடுத்து, உசேன் போல்டின் லீலைகளால், அவரது காதலி அவரை விட்டு பிரிந்து செல்லப்போவதாக செய்திகள் வெளியானது.
பின்னர், தாயகம் திரும்பிய உசேன் போல்ட் தனது காதலியை  சமாதானப்படுத்தியதாக கூறப்பட்டது. இதை உறுதிப் படுத்தும் விதமாக, அவர், காதலியுடன் இருக்கும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
 
இந்நிலையில், உசைன் போல்ட் ஜெர்மனியின் மூனிச் நகரில் அழகி ஒருவருடன் பீர் குடித்துக்கொண்டு நெருக்கமாக பேசிக்கொண்டிருப்பதை போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், அந்த அழகியுடன் இருக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டு உள்ளது.

வீடியோ இங்கே: